Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 11 - Anu Amaippu 01

Presentations | Tamil

The first part of the lesson consists of a clear explanation of the structure of atoms that can only be seen with the invisible electron microscope. How did Rutherford first test the atom through the gold plate experiment, how did he explore his experiment as a world famous one, what he found in the experiment, important ideas, his principle, and its limitations, will be known. Next we will get to know about Bohr’s Model of an Atom, its main elements and main postulates. How did Rutherford's student James Chadwick discover the neutron, properties of neutrons, properties of elementary particles, all of which will be clearly described in this section. What is atomic number and mass number? This chapter will provide the best answer to the question about atomic and mass number and their symbols. We will get a clear understanding of how atoms share electrons, the rules for that, and the valence electron. Finally in this section we will also learn about electron distribution and atomic structure diagrams of elements 1-20. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!

இப்பாடத்தின் முதல் பகுதி கண்களுக்குத் தெரியாத ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே காணக் கூடிய அணுக்களின் அமைப்பைப் பற்றிய தெளிவான விளக்கமான பகுதிகளை உடையது. அணுவை முதலில் ரூதர் போர்டு எவ்வாறு தங்கத் தகடு ஆய்வின் மூலம் சோதித்தார், அச்சோதனையை எவ்வாறு உலகறிய செய்தார், சோதனையில் அவர் கண்டவை, முக்கிய கருத்துக்கள், அவரின் கொள்கை மற்றும் அதன் வரம்புகள் என அனைத்தையும் நாம் அறிந்து கொள்வோம். அடுத்ததாகப் போரின் அணுக் கொள்கை, அதன் முக்கிய கூறுகள், குறைபாடுகள் ஆகியவையும் நாம் தெளிவாக அறியலாம். ரூதர் போர்டின் மாணவரான ஜேம்ஸ் சாட்விக் எவ்வாறு நியூட்ரானை கண்டறிந்தார், நியூட்ரானின் பண்புகள், அடிப்படை துகள்களின் பண்புகள் என அனைத்துமே இப்பகுதி நமக்குத் தெளிவாக வழங்கும். அணு எண் மற்றும் நிறை எண் என்றால் என்ன? அவற்றின் குறியீடுகள் பற்றிய கேள்விக்கு இப்பாடப்பகுதி சிறந்த விடையை வழங்கும். அணுக்கள் எவ்வாறு எலக்ட்ரான் பகிர்வு, அதற்கான விதிகளையும், இணைதிறன் எலக்ட்ரான் பற்றிய தெளிவான புரிதலையும் பெறுவோம். இறுதியாக இப்பகுதியில் 1- 20 வ்ரையுள்ள தனிமங்களின் எலக்ட்ரான் பகிர்வு மற்றும் அணு அமைப்பு வரைபடங்களையும் தெரிந்து கொள்வோம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

Picture of the product
Lumens

200.00

Lumens

PPTX (40 Slides)

Science - Chemistry - Unit 11 - Anu Amaippu 01

Presentations | Tamil