Logo
Search
Search
View menu

Maths - Unit 1 - Uravugalum Saarbugalum 02

Presentations | Tamil

“Mathematicians do not study objects, but relations between objects . . . Content to them is irrelevant: they are interested in form only” – Henri Poincare In a manuscript Leibniz used the word “function” to mean any quantity varying from point to point of a curve. Leibniz provided the foundations of Formal Logic and Boolean Algebra, which are fundamental for modern day computers. The notion of sets provides the stimulus for learning higher concepts in mathematics. A set is a collection of well-defined objects. This means that a set is merely a collection of something which we may recognize. In this chapter, we try to extend the concept of sets in two forms called Relations and Functions. It is quite interesting to note that most of the day-to-day situations can be represented mathematically either through a relation or a function. For example, the distance travelled by a vehicle in given time can be represented as a function. The price of a commodity can be expressed as a function in terms of its demand. The area of polygons and volume of common objects like circle, right circular cone, right circular cylinder, sphere can be expressed as a function with one or more variables. Now we are about to study a new set called “cartesian product” for the given sets A and B.

கணிதவியலாளர்கள் பொருட்களைப் பற்றி அறிய விரும்புவதில்லை, ஆனால் அவற்றிற்கு இடையே அமைந்த தொடர்பை வெளிப்படுத்துவார்கள்... பொருள்களின் அளவு முக்கயமில்லை, ஆனால் அவற்றின் வடிவத்தை புரிந்துக் கொள்ளவே விரும்புவர். -ஹென்றி பாயின்கேரே லீபிநிட்ஸ் பயன்படுத்திய வார்த்தை ‘சார்பு’ ஆனது ஒரு வளைவின் எந்த அளவும் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மாறுபடும் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒரு வளைவரையில் காணப்படும் புள்ளிக்கு ஏற்றவாறு மாறும் தன்மையைக் குறிக்க லீபிநிட்ஸ் “சார்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். கணிதத்தில், அதிகமான கோட்பாடுகளைப் படிப்பதற்கு, கணங்களின் கருத்து தேவைப்படுகிறது. கணமானது நன்கு வரையறுக்கப்பட்ட, பொருள்களின் தொகுப்பு ஆகும். அதாவது ஒரு கணமானது, தெரிந்த பொருள்களினால் ஆன தொகுப்பு ஆகும். இந்த அத்தியாயத்தில், கணங்கள் ‘உறவுகள்’ மற்றும் ‘சார்புகள்’ ஆகியவற்றை எவ்வாறு அமைக்கின்றன எனக் கற்க முற்படுகிறோம். நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலான செய்திகளை உறவுகள் அல்லது சார்புகளைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ளலாம். வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தொலைவைக் கடப்பதைச் சார்பின் மூலம் குறிப்பிடலாம். ஒரு பொருளின் விலையை, தேவையின் அடிப்படையில் சார்பின் மூலமாக வெளிப்படுத்தலாம். பலகோணங்களின் பரப்பு மற்றும் கனஅளவு, வட்டம், நேர்வட்டக் கூம்பு, நேர்வட்ட உருளை, கோளம் ஆகியவற்றின் கன அளவுகளை ஒன்று அல்லது பல மாறிகளை உடைய சார்பாகக் குறிப்பிடலாம். நாம் தற்போது கொடுக்கப்பட்ட இரு கணங்கள் A மற்றும் Bயிலிருந்து கார்டீசியன் பெருக்கல் வாயிலாகப் புதிய கணம் உருவாக்கும் முறையைப் பற்றி படிக்கலாம். இதனைப் பதிவிறக்கி கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

345.00

Lumens

PPSX (46 Slides)

Maths - Unit 1 - Uravugalum Saarbugalum 02

Presentations | Tamil